இந்திய முன்னனி நடிகரான ஆர்யா இன்று யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார்.
வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்கு இலங்கை வந்துள்ள அவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.
எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கை அசைத்து விரைவாக நகர்ந்து சென்றதைக் காண முடிந்தது.