உத்திரபிரதேச மாநிலத்தில் கணவர் ஒருவர், தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் ஓடிய காரணத்தால் அவரை பொதுமக்கள் முன்னிலையில் கட்டிவைத்து பயங்கரமாக அடித்துள்ளார்.
Launga கிராமத்தை சேர்ந்த Shaudan Singh என்பவரது 20 வயது மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்து, நாளடைவில் அந்த ஆணுடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
இதனால், அவமானத்திற்கு ஆளான Shaudan Singh தனது மனைவியை கண்டுபிடித்து, தனது கிராமத்தில் உள்ள மரத்தில் கட்டிவைத்து, பெல்ட்டை கொண்டு காலுக்கு அடியில் கொடுமையான முறையில் அடிக்கிறார்.
Bulandshahr: woman in her late 20s tied to a tree, FLOGGED & videographed by village court after husband Shravan accused her of having an affair with a neighbour. Village head Shersingh later molested her in a room to fprce her to stay quiet.
India 2018.pic.twitter.com/jYe53KXwqD— Omar (@timesn0w) March 22, 2018
இந்த சம்பவத்தை சுற்றி நின்றுகொண்டிருந்த ஊர் பொதுமக்கள், எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்பெண் வலியால் துடித்தும், கணவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். வீடியோ வெளியானதையடுத்து, பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி கணவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர்.
அப்பெண்ணுக்கு தக்க பாடம் நடத்த வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு நடந்துகொண்டதாக அவர்கள் பொலிசில் தெரிவித்துள்ளனர்.