யானை மிதித்ததில் பரிதாபமாக பலியான பாகன்..!

கன்னியாகுமரியில் கோயில் திருவிழாவுக்கு அழைத்துவரப்பட்ட யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வெள்ளச்சிபாறை பத்ரகாளியம்மன் கோயில் விழா இன்று காலை தொடங்குகிறது. இன்று மாலை யானை அணி வகுப்புடன் ஊர்வலம் நடக்கவிருந்தது. இதற்காக கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து வள்ளி என்ற பெண்  யானை நேற்று இரவு அருமனைக்குக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து யானை கோயில் அருகில் கட்டிவைக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு சுமார் 11 மணியளவில் பாகன் சமீர் யானையை இரும்புக் கம்பியால் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த யானை தும்பிக்கையால் பாகனை தூக்கி வீசியது. பின்னர் ஆத்திரம் தாங்காமல் காலால் மிதித்தது. இதில் பாகன் சமீருக்குக் குடல் சரிந்தது. அங்கிருந்தவர்கள் பாகனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பாகன் சமீர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அருமனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.