எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் விடுத்துள்ள எச்சரிக்கை!

போருக்குப் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்த ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மேலும் தாமதப்படுத்தினால், அதன் கடுமையான விளைவுகளை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து, கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த கடும் எச்சரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பிலிருந்து இயங்கும் தனியார் ஊடகம் ஒன்றினூடாகவே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று வினாவப்பட்டபோது அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் பின்னடித்தால் கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.