வயிற்றில் காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்த நிலையில் சாலையோரத்தில் காணப்பட்ட ஆண் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் மீட்டு சாவகச்சேரி மருத்துவமனையில்சேர்ப்பித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.இந்த சம்பவம் இன்று அதிகாலை மிருசுவிலுக்கும் எழுதுமட்டுவாழுக்கும் இடைப்பட்ட முதன்மைச் சாலையோரத்தில் காயமடைந்த நிலையில் இவர் மீட்கப்பட்டுள்ளார்
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.