இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையிலும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
நேற்றிரவு தொடக்கம் இந்திய எண்ணெய் நிறுவனம் பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்து அறிவிப்பை வௌியிட்டிருந்தது.
எனினும் இலங்கை அரசாங்க நிறுவனமான எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) எரிபொருள் நிலையங்களில் பழைய விலைக்கே இன்னும் எரிபொருள் விற்பனை நடைபெறுகின்றது.
இதன் காரணமாக சிபெட்கோ இன்று காலை முதல் சிபெட்கோ எரிபொருள் நிலையங்களில் அதிக விற்பனை நடைபெறுவதாவும், வாடிக்கையாளர்கள் அதிகளவில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களை நாடி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.