இலங்கை கடலில் காணாமல் போனவர்கள் பிரான்ஸ் கடலில் பாதுகாப்பாக மீட்பு!

பிரான்சிற்கு சொந்தமான ரீயூனியன் தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளான நிலையில் கடலில் மிதந்த 6 இலங்கையர்கள் அந்த நாட்டு கப்பல் ஊடாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் அவர்கள் பயணித்த படகு தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளார்கள் என மீன்பிடி திணைக்களத்தின் உதவி இயக்குனர் பத்மபிரிய திசேரா குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இதுவரையில் ரீயூனியன் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மீனவர்கள் கடந்த பெப்ரவரி மாதம் நீர்கொழும்பு கடலுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.