சீனாவில் சாலையைக் கடக்கும் முன் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தாயின் அலட்சியத்தால் அவரது மகன் விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
குவாங்ஸி பகுதியில் சாலையைக் கடக்க இருந்த தாய் மகன்களை கவனிக்காமல் செல்போன் விளையாட்டிலேயே மும்முரமாக இருந்துள்ளார்.
இதனால், தாமாகவே சாலையைக் கடந்த சிறுவன் விபத்தில் சிக்கினார். சிறுவன் குறுக்கே வருவதை முன்பே அறிந்த கார் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லேசான சிராய்ப்புக்களுடன் சிறுவன் உயிர் தப்பியுள்ளான்.