அண்ணன் வராதததால் காதலிக்கு உதவி செய்த சிறுவன்!

அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணின் காதலன் இசை விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத காரணத்தால் காதலனது 2 வயது தம்பி காதலனாக மாறி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

New Orleans- ஐ சேர்ந்த Skyler Fontaine (18) என்பவரது காதலன், கடற்படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இசை விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், துரதிஷ்டவசமாக காதலனுக்கு பயிற்சி வகுப்பு இருந்த காரணத்தால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், இதில் காதலனின் இடத்தில் அவரது குட்டி தம்பி தயார்செய்யப்பட்டார். தனது சகோதரன் அணியும் கடற்படை ஆடை போன்று சிறுவனுக்கு அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டான்.

சகோதரனின் காதலியுடன் சேர்ந்து விதவிதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை Skyler தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அழகிய புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, 42,000 ரீடுவிட் மற்றும் 200,000 லைக்ஸ் பெற்றுள்ளது.

மேலும், தனது காதலனின் புகைப்படத்தையும் கையில் வைத்துக்கொண்டு Skyler Fontaine புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து Skyler Fontaine கூறியதாவது, இந்த புகைப்படம் இவ்வளவு வரவேற்பை பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதனைப்பார்த்து எனது காதலன் ஆச்சரியம் கலந்த சந்தோஷம் அடைந்தார் என கூறியுள்ளார்.