நேரடியாக களமிறங்கும் மஹிந்த! கிட்டுமா வெற்றிப்படி?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சியின் வேட்பாளருடைய வெற்றிக்காக நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்யப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுண ஆகியன இணைந்து வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வேட்பாளரின் வெற்றிக்காக நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்ய போவதாகவும், தேர்தல் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்குவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் போன்றே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் புதிய வியூகங்களை வகுத்துச் செயற்படவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.