ரஷ்யாவில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 4 வயது மகனை மொட்டைமாடியில் இருந்து தாயார் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாயும் மகனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Andrey Yekimov மற்றும் Anastasia தம்பதியினர் சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களது 4 வயது மகனை யார் வளர்ப்பது என்பது தொடர்பில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் சிறுவன் மிஷா தந்தையின் அரவணைப்பில் வளர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த Anastasia இந்த கொடூர முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Anastasia எப்போதுமே தமது மகன் மிஷா மீது அக்கறையுடன் இருந்தது இல்லை எனவும், மதுவுக்கும் போதை மருந்துக்கும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார் எனவும் பொலிஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரமே விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும், அது தற்போது கொலை மற்றும் தற்கொலையில் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.