பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா இலங்கையைச் சேர்ந்த சுசானாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகரான ஆர்யா, தனக்கு ஏற்ற ஜோடியை தேடி வருகிறார்.
ஆர்யாவை கரம் பிடிக்கும் ஆசையில் 16 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இவர் தனக்கு சரியான வாழ்க்கை துணையாக இருக்கமாட்டார் என தோன்றும் பெண்களை ஒவ்வொரு வாரமும் வெளியேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது வரை 4 போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் உள்ளனர். மற்ற பெண்கள் அனைவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டனர்.
நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டி வருவதால், நடிகர் ஆர்யா நிகழ்ச்சியில் இருக்கும் 4 பெண்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் குடும்பத்தினருடன் பழகி வருகிறார்.
அந்த வகையில் நான்கு போட்டியாளர்களில் ஒருவரான சுசானாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் கனடாவில் இருந்தாலும், அவரின் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆர்யா அங்கு சென்றுள்ளார்.