டீ-யின் விலையைக் கேட்டு அதிர்ந்து போன ப.சிதம்பரம்!

சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ மற்றும் காப்பியின் விலையைக் கேட்டு, தான் அதிர்ந்து போனதாக ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

ப.சிதம்பரம்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கடைகளில் டீ மற்றும் காப்பியின் விலைகளைக் கேட்டு அதிர்ந்து போனதாகவும், மேலும் அதனை வேண்டாம் என நிராகரித்ததாகவும் நான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

அவரின் ட்விட்டில், ‘சென்னை விமான நிலையத்தில் உள்ள காப்பி ஷாப் ஒன்றில், டீ ஆர்டர் செய்தேன். சூடான நீர் மற்றும் ஒரு டீ பேக்கும் வழங்கினார்கள். அதன் விலை ரூ.135 என்றனர். இதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அதனால், ஆர்டர் செய்த டீ வேண்டாம் என மறுத்துவிட்டேன். அதன்பின், காபியின் விலையை விசாரித்தேன், அதன் விலை ரூ.180 என்றனர். இதை யார்தான் வாங்குவார்கள் என்ற கேள்வி கேட்டதற்கு, பலபேர் வாங்குவார்கள் என்று பதில் வந்தது’ என  ஆதங்கமாக ட்விட் செய்துள்ளார்.