72 வயதில் வளர்ப்பு மகளுடன் உறவு- குழந்தையும் பிறந்தது! உலகப் பிரபலத்தின் தந்தையா?

அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வாளரும் கோடீஸ்வரருமான எலன் மஸ்க்கின் தந்தை வளர்ப்பு மகளுடன் தகாத உறவு வைத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமீபத்தில் பேட்டி ஒன்றின்போது எலன் மஸ்க், தனது தந்தையை மிக மோசமான மனிதர் என வர்ணித்தார்.

மேலும் எந்த குற்றத்தை வேண்டுமானாலும் அவர் செய்வார், எல்லா வகையான குற்றங்களையும் அவர் செய்துள்ளார் எனவும் கடுமையாக விமர்சித்தார்.

இவ்விவகாரம் குறித்து பதிலளித்துள்ள எலனின் தந்தையான எரல் மஸ்க், “அவன் வளரவேயில்லை, அவன் வளர வேண்டும்” என கூலாக பதிலளித்துள்ளார்.

அத்துடன், தனது வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்ற மூவரை சுட்டுக் கொன்று விட்டதாகவும், ஜனா என்ற பெண்ணுடன் உறவு கொண்டு குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனா என்பவர் எரலின் முன்னாள் மனைவியான ஹெய்டியின் மகளாவார், அதாவது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துள்ளார்.

இந்த சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் எரல், தனது முன்னாள் மனைவியே மறந்துவிட்டதாகவும், ஜனா தன்னுடைய பெண் தோழி எனவும் பதிலளித்துள்ளார்.

இதனால்தான் அவரை எலன் மஸ்க் அவ்வளவு மோசமாகத் திட்டியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.