நண்பியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்த இளைஞன்!

ஹுங்கம பிரதேசத்தில் கூர்மையான ஆயுதத்தில் தாக்கி தனது நண்பியை கொலை செய்த இளைஞன் பேருந்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நீண்ட தூரம் சென்றமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதுபெலேன பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார். எனினும் மாத்தறையில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தங்காலை, ரத்ன பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவராகும்.