”என் வருங்கால கணவருக்கு நன்றி” நயன்தாரா பயன்படுத்திய வைரல் வார்த்தை

தனது வருங்கால கணவர் பற்றி விருது வழங்கும் விழாவில் நடிகை நயன்தாரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கம் போல ஒரு விருது விழாதான் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் தன் சர்ப்ரைஸ் பேச்சால் சமூக வலைத்தளத்தை வைரலாக்கி இருக்கிறார் நயன்தாரா.

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக சில வருடங்களாகவே செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கு இருவரும் நேரடியாக இது வரை பதில் கூறியதே இல்லை. அப்படியே சொன்னாலும் மழுப்பல் பதில்கள் மட்டுதான்.

ஆனால் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது, ஜோடிப்போட்டுக் கொண்டு செல்ஃபி எடுப்பது என எல்லாமே வைரல் தான்.

இந்நிலையில் நடிகை நயன் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். வழக்கமாக அவர் அதிகம் பேசுவதில்லை. தனிப்பட்ட பேட்டிகளை கூட அவர் சில வருடங்களாக தவிர்த்தே வருகிறார்.

குறிப்பாக அவரது சொந்த வாழ்க்கையை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன.

விக்னேஷ் சிவனுக்கும் இவருக்கும் திருமணமே முடிந்து விட்டதாக கூட பலர் செய்தி போட்டனர். அதற்கு எல்லாம் நயன் பதில் கொடுக்கவே இல்லை.

காதல் இருக்கா? இல்லையா? என எல்லோரும் மண்டைக் குழம்பிப் போய் தவித்தனர். அதற்கு  ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார் நயன்.

பொதுமேடையில் மைக்கை பிடித்த நயனை கண்காணிப்பு வலையத்திற்கு எப்படியோ நகர்த்தி கொண்டு வந்து நிறுத்தினர் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்.

அதற்கு சற்றும் தயங்காமல் நின்ற நயன் “வருங்கால கணவருக்கு நன்றி” என்றார். அடுத்து என்ன ஆடிடோரியமே அதிர்ந்தது. அந்தச் சத்தம், அடங்க அவ்வளவு நேரம் ஆனது.

மேலும் அவர், “எனது தாய், சகோதரர், வருங்கால கணவருக்கு நன்றி” என்றார். “ நான் இப்போது வாங்கியுள்ள இந்த விருது சினிமா விருதுகளிடமிருந்து மிகவும் மாறுப்பட்டது.

நான் வீட்டிற்கு திரும்பியதும் என்னை சுற்றி பல சாதனை பெண்கள் வலம் வருவார்கள். அவர்களை பார்த்த பின்பு மீண்டும் நான் உத்வேகம் அடைந்து எனது வேலையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பேன்” என்று தெரிவித்தார்.

அவரது பேச்சில் கணவருக்கு நன்றி என்பது விக்னேஷ் சிவனை பற்றிதான் என்பதற்கு நேரடி விளக்கம் அவசியம் இருக்காது.