திருகோணமலை – சேருநுவர பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஐவரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நிக்கவரட்டிய, குருணாகல், அக்போபுர மற்றும் மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் உட்பட நால்வரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் 80 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரத்துடன் சேருநுவர, மஹிந்தபுர பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட வேளையில் சேருநுவர பொலிஸாரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய மண்வெட்டி, இரும்பு வகைகள், கூடைகள் மற்றும் இரும்பு கூர்கள் என்பவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.