துபாயில் மரணித்த கணவர்….வறுமையால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலமுத்து என்பவர் துபாயில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது வருமானத்தை நம்பியே, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கணவர் அனுப்பும் பணத்தை வைத்து, தமிழரசி தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார்3

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆலமுத்து இறந்துவிட்டார். இவர் அங்கு சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து இந்தியா கொண்டுவரப்பட்டார்.

கணவர் இறந்துவிட்ட நிலையில், தமிழரசியின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. ஒரு வேளை சாப்பாட்டுக்கு இவர்களது குடும்பம் சிரமத்திற்கு ஆளானது.

இதனால் மனமுடைந்த தமிழரசி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது என்ற விபரீத முடிவுக்கு வந்தார். இதற்காக குழந்தைகள் குடிக்கும் பாலில் விஷத்தை கலந்த அவர், குழந்தைகளுடன் சேர்ந்து தானும் அந்த விஷப் பாலை குடித்துள்ளார்.

உயிருக்கு போராடிய நிலையில், இவர்கள் மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.