பேஸ்புக் நிறுவனம் தமது ஊழியர்களுக்காக செய்துள்ள வசதிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.நிறுவனங்கள் பல தமது ஊழியாகளின் பணிச்சுமை கருதி பல செயற்திட்டங்களை கூடுதலாக மேற்கொண்டு வருகின்றன. மேலும் ஊழியர்களின் பொழுது போக்கை மாற்றியமைக்க பல வழிகளில் நிறுவனங்களிலே பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.இந்த வகையில் பல கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நிறுவனமான பேஸ்புக் நிறுவனது தனது ஊழியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வாலட் பார்க்கிங் மற்றும் மின் கார்களுக்கு சார்ஸ் செய்யும் வசதி, மேலும் அலுவலகத்திலேயே மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதனை விட முடி வெட்டும் சலூன்கள், சாப்பிடுவதற்கு இலவச உணவுகள், குழந்தை பெற்ற ஊழியர்களுக்கு 4000 டொலர் நிதி உதவி, முழுநேர ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 21 நாள் தொடர்ந்து விடுமுறை, உடற்பயிற்சி கூடங்கள், மேலும் குழந்தை பெற்ற ஊழியர்களுக்கு 4 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, போன்ற வசதிகளுடன் பொழுதை போக்குவதற்கு ஏற்ற பூங்கா வசதிகளும் பேஸ்புக் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.