வியட்நாமில் பரபரப்பான நெடுஞ்சாலையில் குழந்தை தவழ்ந்து வரும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், காரில் வந்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவர் குழந்தையை பார்த்ததும் வண்டியை நிறுத்துகிறார்.
முன்னதாக அவர் தனக்குமுன் சென்று கொண்டிருந்த லொறி ஓட்டுநர் வண்டியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்ததைக் கவனித்து வண்டியின் வேகத்தைக் குறைத்தார்.
பின்னர்தான் சாலையில் கைக்குழந்தை ஒன்று தவழ்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார்.
உடனடியாக ஓட்டுநர்கள் இருவரும் குழந்தையைத் தூக்க ஓடும் முன் ஒரு பெண் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்வது போன்று முடிகிறது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது