யாழ். சாவகச்சேரி பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் கடத்திச் சென்றுள்ளதாகவும், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். அல்வாய் பகுதியை சேர்ந்த 34 மற்றும் 36 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையின் பின்னர் குறித்த இருவரையும் யாழ். சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்