இந்தோனேஷியா கடல் பகுதியில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜகார்தா: கிழக்கு இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் 6.4 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ் 171 கி.மீ., ஆழத்தில் ஏற்றபட்ட இந்நிலநடுக்கம், ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. கடும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோளில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது சரியாக இன்று அதிகாலை 1.45 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.