க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!

2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் 28ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மறுநாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைப் பெறுபேறுகள் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.