இந்த உணவை சாப்பிட்டால் கட்டாயம் மாரடைப்பு!

நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் வந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் அல்லவா..?

சைவ உணவை விட அசைவ உணவை தான் அதிகமாக உண்ண பலரும் விரும்புகின்றனர்.

அதில் குறிப்பாக சிக்கன் மற்றும் மீன் உண்பதில் அதிக ஆர்வம் உள்ளது….இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் அபாயம் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது

அமெரிக்காவில் உள்ள, ஹார்வார்டு டி.எச்.சான் பொதுநல பள்ளியின் நிபுணர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

ஆராய்சிக்காக, 86 ஆயிரம் பெண்களிமும்,17,104 ஆண்களிடமும் இந்த ஆராய்ச்சி நடத்தப் பட்டது. இவர்களில் கிரில் சிக்கனை அதிகம் உண்டவர்களில் 37,123 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட நபர்கள் ஆய்வுக்கு முன் சர்க்கரை வியாதியோ,புற்றுநோயா,ரத்த அழுத்தம் உள்ளிட்ட எதுவும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இறைச்சி,சிக்கன் போன்றவற்றை அதிக அளவு வெப்பத்திற்கு உட்படுத்தப் படுவதால், அதில் உள்ள இன்சுலின் விஷத்தன்மை கொண்டதாக மாறி, மனிதர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும், ரத்த குழாய்களில் சுருக்கத்தை ஏற்படுத்தியும், ஒரு விதமான கொழுப்பு ரத்த நாளங்களின் உட்புறத்தில் சேர்ந்து அப்படியே பெரும் அடைப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் ரத்த ஓட்டம் பழுதுபட்டு உடனடியாக மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. ரத்த நாளமும் வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இந்த தகவலை அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.