அமெரிக்காவில் 4 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக இணையத்தில் விற்பனை செய்த தந்தைக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்த ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி(30) என்பவரே தமது 4 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறி தண்டனை பெற்றவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஹூஸ்டன் நகர பொலிசாரின் கவனத்திற்கு “Play with Daddie’s Little Girl” என்ற விளம்பரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முடுக்கிவிட்ட அதிகாரிகள் ஜேம்ஸ் ட்ரூலி என்பவர் மீது சந்தேகம் எழுப்பினர்.
இதனையடுத்து அவரது மின் அஞ்சல் நடவடிக்கைகளை விசாரித்ததில், அவர் சுமார் 70 நபர்களுடன் பேரம் பேசியதும் தமது மகள் குறித்து விவரித்ததும் தெரிய வந்தது.
மேலும், வாடிக்கையாளர் ஒருவரிடம் 2 மணி நேரத்திற்கு 1000 டொலர்கள் பெற்றுக் கொண்டு சிறுமியை அனுப்பி வைத்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
மட்டுமின்றி, தமது மகள் சிறுமி என்பதால் பாலியல் உறவு மட்டும் வேண்டாம் எனவும் தமது வாடிக்கையாளர்களிடம் நிர்பந்தித்துள்ளார்.
ஆனால், அந்த வாடிக்கையாளர் பொலிஸ் அதிகாரி என்பதை ஜேம்ஸ் ட்ரூலி கவனிக்க மறந்துள்ளார்.
இந்த நிலையில் 2015 நவம்பர் மாதம் ஜேம்ஸ் ட்ரூலி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஹாரீஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 30 ஆண்டுகள் வீதம் 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மட்டுமின்றி 75 வயது வரை இவருக்கு பிணை வழங்க கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.