அக்காவிற்கு யமனாக மாறிய தங்கை!! கொழும்பில் நடந்த கொடூரம்!!

கொழும்பு 15 – மோதரை வீதி பகுதியில் இரண்டு சகோதிரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு அதிகரித்து இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இளைய சகோதரியால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் 56 வயதான மூத்த சகோதரியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிறிய தாயால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தனது தாய் உயிரிழந்துள்ளதாக மகளினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பின்னர் தாக்குதலை மேற்கொண்ட பெண், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதோடுஇ சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.