கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த நீர்த்தாங்கி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.இதேவேளை, இந்த நீர்த்தாங்கி தற்போது அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.