கிழக்கு ஐரோப்பாவில் சில பகுதிகளில் செம்மஞ்சள் நிறத்தில் மழை பெய்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, பல்கேரியா மற்றும் ரோமானியாவில் உள்ள பல பகுதிகளில் அசம்மஞ்சள் நிறத்தில் மழை பெய்துள்ளது. இதற்கு காரணமாக வட ஆபிரிக்காவில் உள்ள பாலை வனங்களில் ஏற்படும் புயலால் பரவும் மணல் மற்றும் தூசிகள் வளிமண்டலத்தில் தேங்குவதனால் இத்தகைய நிகழ்வு நடைபெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் நாஸாவின் வளிமண்டல புகைப்படத்தில் வளிமண்டலத்தில் மணல் மற்றும் தூசிகள் தேங்கியுள்ள வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மழை பொழியும் போது மழை செம்மஞ்சள் நிறத்தில பொழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஆபத்தின் அறிகுறியா என எண்ணி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.