சென்னையில்,கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் சமாதிக்கு நினைவிடம் கட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூபாய் ஐம்பது கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த சமாதி கட்டுவதற்கான அரசு கடல்சார் பகுதி சீரமைப்பு குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு சுற்றுசூழலை பாதுகாப்பது,சரியான திட,திறவு கட்டுமான கழிவுகளை அகற்றுதல்,நிலநடுக்கத்திற்கு ஏற்றவாறு கட்டுதல்,நிலத்தடி நீரை உறிஞ்சாமல் எடுத்தல் போன்ற பல நிபந்தனைகளும் விதிக்க பட்டிருக்கிறது.
கட்டிட வரைபடம் தயாராகி கொண்டு இருப்பதாகவும் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும்,தொடங்கிய தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்தில் பணிகள் நிறைவு பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி அவர்கள் வாழ்ந்த வேதா நிலையமும் ரூபாய் 20 கோடி அரசாங்க செலவில் நினைவிடமாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.