வைத்தியசாலையில் குழந்தையை கடித்த நாய்!

வைத்தியசாலையில் குழந்தையை கடித்த நாய் -நோயாளிகள் அச்சத்தில்!

ஏறாவூர், ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்து இரண்டரை வயதுடைய ஆண் குழந்தையை நாய் கடித்ததில் அக்குழந்தை காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது…….

ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமியாரை நலம் விசாரிப்பதற்காக தனது இரண்டரை வயதுடைய ஆண் குழந்தையுடன், தாய் நேற்றையதினம்(25-03-2018) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது வைத்தியசாலை வளாக சிறுவர் பூங்காப் பகுதியில் அக்குழந்தை நடந்து சென்ற சமயம் அங்கு நடமாடித்திரிந்த நாய்களில் ஒன்று குறித்த குழந்தையை கடித்துக் குதறியுள்ளது.

கால்களில் பல இடங்களில் நாயின் பற்கள் பதிந்த இரத்தக் காயத்துடன் குழந்தை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஏறாவூர் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கும் உறவினர்களுக்கும் அச்சத்தைக் கொடுத்துள்ளதோடு இதுபற்றி முறையான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனா்.