வெள்ளையாய் ஜொலித்திட: இதை மட்டும் செய்திடுங்கள்!

சருமத்தில் உள்ள நிறத்தை கலராக மாற்றுவதற்கு சில இயற்கை வழிகளை பின்பற்றி வந்தாலே போதும். அதனால் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

சரும நிறத்தை மாற்ற சூப்பரான ஐடியா?
  • தயிர் ஏடு அல்லது பால் ஏடு மற்றும் மஞ்சள் தூளை ஆகியவை கலந்து நன்கு பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள்மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
  • நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரைக் கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தின் மீது தடவி 20 நிமிடம் கழித்து நீரில் கழுவி வர முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், பருக்கள் மறையும். முகம் பொலிவு பெறும்.
  • பப்பாளிப்பழ சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் ஆடையை ஆகியவை சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து அதை முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மீது போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய்விடும்.
  • வெள்ளரிக்காய், மற்றும் கேரட்டை நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும்.
  • ஆரஞ்சுப் பழத்தோலை நன்கு உலர்த்தி வெயிலில் காயவைத்து பொடி செய்து அதை பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமக் கருமை விரைவில் மறையும்.