இந்த சிக்கன் டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம் தெரியுமா?

டயட்டில் இருப்பவர்களும் சிக்கன் சாப்பிட வேண்டுமானால் லீன் சிக்கனை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

லீன் சிக்கன் என்பது தோல் நீக்கப்பட்ட சிக்கன் அல்லது சிக்கன் நெஞ்சுக்கறி ஆகும். இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் சத்துக்களோ ஏராளம். ஆகவே இது அனைவருவம் சாப்பிட ஏற்ற ஆரோக்கியமான ஓர் அசைவ உணவுப் பொருளாகும்.

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் அமினோ அமிலமான ட்ரிப்டோஃபேன் அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு உடனடியாக ரிலாக்ஸ் அளிக்கும்.

மூளையில் செரடோனின் அளவு அதிகரித்து, மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனநிலையை மேம்படுத்த உதவும்.

நீங்கள் கட்டுமஸ்தான உடலைப் பெற நினைத்தால், தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களுடன், பி வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது கண் புரை, பல்வேறு சரும பிரச்சனைகள், உடல் பலவீனம் போன்றவற்றை தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.

ஆய்வு ஒன்றில் தோல் நீக்கப்பட்ட சிக்கன், இயற்கையாகவே குடல் புற்றுநோயைத் தடுக்கும் என தெரிய வந்துள்ளது.

தோல் நீக்கப்பட்ட சிக்கனில் பயனுள்ள புரோட்டீன் உள்ளது. இது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குறைக்கும். மேலும் தோல் நீக்கப்பட் சிக்கனில் உள்ள பாஸ்பரஸ், எலும்புகள், பற்கள் மற்றும் மைய நரம்பு மண்டலத்தின் வலிமைக்கு உதவியாக இருக்கும்.