ரஷ்யாவின் Grozny நகரத்தில் அமைந்துள்ள 12 மாடி கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
குறித்த கட்டிடத்தில் இருந்து சுமார் 200 பேரை பத்திரமாக மீட்டு வெளியேற்றியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Grozny நகரத்தில் அமைந்துள்ள இந்த 12 மாடி கட்டிடத்தின் முகப்பில் திங்களன்று மாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மொத்தம் 44 வாகனங்களில் 155 தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சைபீரியாவின் Kemerovo நகரில் ஞாயிறு அன்று வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 64 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.