நீரிழிவு நோய் உள்ளோருக்கு உணர்வு திறன் குறைவடையும் சாத்தியம்!!

நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கு அவர்களின் பாதங்களின் உணர்திறன் குறைவடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.இந்த நிலை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் கால்களில் புண் ஏற்படுதல், கிருமித் தொற்றுகை, அவய இழப்பு, மூட்டுகள் சேதமடைதல் போன்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும்.

உங்களின் பாதங்களின் உணர்திறனை அறிவதற்கு நீங்கள் கண்களை மூடி கால்களை நீட்டியவாறு இருந்து கொண்டு மற்றுமொருவரை உங்களின் கால் விரல்களின் அடிப்பகுதியை மெதுவாக தொடுமாறு கூறவேண்டும்.

அவர்கள் தொடுவதை உணர்ந்து கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்களின் கால்களின் உணர்திறனிலே பாதிப்புகள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.எனவே, இதனை நீங்கள் உங்கள் வைத்தியரை சந்திக்கும் பொழுது தெரியப்படுத்துவது நல்லது.இவ்வாறு சோதிக்கும் முறையை தொடுகைச் சோதனை என்று சொல்லுவார்கள்.