மைத்திரி, மஹிந்த தொலைபேசியில் மந்திராலோசனை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தொலைபேசியில் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் செல்ல முன்னர் இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது உட்பட்ட பல விடயங்கள் இந்தத் தொலைபேசி உரையாடலின்போது விரிவாகப் பேசப்பட்டது என ஜனாதிபதியுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது போன்ற விடயங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், விரைவில் மைத்திரியும், மஹிந்தவும் நேரடியாகவே சந்தித்துப் பேசுவார்கள் எனவும் மேலும் அறியமுடிந்தது .