நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய வருங்கால மனைவியை தேடி வருகிறார். இந்த போட்டியில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஏற்கனவே 8 பெண்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும், எதிர்ப்பும், புகார்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. சமூக நல ஆர்வலர்கள் சிலர் இந்த நிகழ்ச்சி மீது நீதிமன்ற வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஷுட்டிங் இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த சிலர் சமூக நல ஆர்வலர்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அவதானித்து கொண்ட படக்குழு, நிகழ்ச்சியை நிறுத்தியது.
மேலும், அங்கிருந்த படக்குழு உடனடியாக இடத்தை காலி செய்துகொண்டு கிளம்பியது.