தேனி மாவட்டத்தில் தனது கணவர் முறையற்ற உறவுக்கு எதிர்ப்பாக இருந்த காரணத்தால், அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தேனி அருகேயுள்ள குள்ளக்கவுண்டபட்டியை சேர்ந்த சாமியும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சுதாகரன் என்பவர் மீது மூலம் புயல் வீசியது. சுகந்திக்கும், ராமநாதபுரத்தில் ஆயதப்படை காவலராக பணியாற்றி வரும் சுதாகரன் என்பவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இது சாமிக்கு தெரிந்து தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இருப்பினும், தனது கணவனின் எதிர்ப்பை மீறி உறவினை தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் தனது மனைவியின் நடைமுறைகளில் சந்தேகம் அடைந்த சாமி, அவரது கைப்பேசியை எடுத்து சோதனை செய்ததில், தன்னை கொலை செய்துவதற்கு சுதாகரனோடு சேர்ந்து திட்டம் போட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாட்சியங்களை சேகரித்துக்கொண்டு பொலிசில் சாமி புகார் அளித்துள்ளார். கூலிப்படையை ஏவிய காவலர் சுதாகர், சாமியை கொலை செய்வதற்கு சரியான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருந்துள்ளார் என்பதை உறுதி செய்த பொலிசார், கொலைக்கு திட்டமிட்ட சுகந்தி, காவலர் சுதாகர், சுதாகரின் நண்பர் மணிகண்டன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த பாண்டியராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.