பல கோடி ரூபா செலவில் தென்னிலங்கையில் நவீன ரயில் நிலையம் ஒன்று துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.கொட்டாவ – மாக்கும்புர பகுதியில் இந்த ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படுகின்றது.இதில் மின்சார லிப்ட், உட்பட நவீன வசதிகள் உள்ளடங்குகின்றன. இதன் ஆரம்பக் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான 845 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவே இலங்கையின் முதலாவது பல்நோக்கு போக்குவரத்து மையமென குறிப்பிடப்படுகின்றது.இதனை நிர்மாணிப்பதற்காக நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இரவு பகல் பாராது நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயில் நிலையத்தின் மூலம் தென்னிலங்கையிலுள்ள லட்சக்கணக்கான பயணிகள் பலனடைவர்கள் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இன்னும் சில வருடங்களில் இந்த அதிநவீன ரயில் நிலையத்தின் ஊடாக பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் குறித்த நவீன ரயில் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.