முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த பக்த அடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்று வரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின் போது தீபத்தில் திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்த அம்மனின் பக்த அடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின் போது ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக் காட்சிகள் தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் புடைசூழ்ந்து வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று 30-03-2018 அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.