யார் தெரியுமா மாறுவேடத்தில் ஊர் சுற்றும் பிரபலம்?

ரசிகர்கள் நடிகர்கள், நடிகைகளை பொது இடத்தில் பார்த்தால், எவ்வளவு கூட்டம் கூடிவிடும் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே பல பிரபலங்கள் விடுமுறை என்றால் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார்கள், அவர்களை அங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என்பதற்காகதான் அப்படி செய்கின்றனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினியை அறிந்திராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போதிலும், இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் முக்கியமானது காபி வித் டிடி ஆகும்.

இந்நிலையில் டிவி தொகுப்பாளரும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி சென்னையில் ஷாப்பிங் சென்றுள்ளார்.

1522135712-8735  மாறுவேடத்தில் ஊர் சுற்றும் பிரபலம்; அது யார் தெரியுமா? 1522135712 8735ரசிகர்கள் யாரும் அவரை அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தை மறைக்கும்படி உடை (பர்தா) அணிந்து சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.