இந்தியா – சென்னையில் தனக்கென வாங்கி வைத்திருந்த மதுவை தாய் குடித்ததால் மகனே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கீழப்பாக்கம் பகுதியை சேர்ந்த 54 வயதான கலாவதிக்கு 25 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
தாய் மகன் இருவருமே மதுக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று கலாவதி மகன் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளார்.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகன் தான் வாங்கி வைத்திருந்த மதுவை காணாததால் வீடு முழுவதுமாக மதுவை தேடியுள்ளார். பிறகு கலாவதி தனது மதுவை குடித்திருப்பதை அறிந்து ஆத்திரத்தில் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் கலாவதியை கீழே தள்ளியுள்ளார். சுவரின் மீது கலாவதியின் தலை மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் பொலிஸார் மகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.