முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மனைவி மறைவு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மானிப்பாய்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் -தர்மலிங்கத்தின் மனைவியும், புளொட் அமைப்பின் தலைவரும்,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தாயாருமான சரஸ்வதி தர்மலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் சுன்னாகம் கந்தரோடையில் காலமானார்

யாழ்.சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையார் இறக்கும் போது அவருக்கு 97 வயது.