வவுனியா பேருந்து நிலையப்பகுதியில் இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் செயற்படும் தமிழ் மொழி சேவைப் பிரிவுக்கு பொதுமக்களினால் குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது குறித்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் செயற்படும் தமிழ் மொழி சேவை தெரிவித்துள்ளதாவது,
வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக வன்னிப் பகுதிகளிலிருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கையினை பொலிஸார் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால், வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் தேவையற்ற விதத்தில் பெண்கள் வியாபார நிலையங்களுக்கு முன்னால் நின்றால் அவற்றை தடுத்தல், அதிகளவான பெண்கள் ஒன்றாக குழுமியிருந்தால் அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 076 622 4949 , 076 622 6363 போன்ற இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்வதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.