கடந்த வருடம் O/L எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு!

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு இன்று இரவு 10 மணிக்கு முன்னர் இணையத்தில் வெளியிடப்படும்.இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 969 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.