பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை பொலிஸில் போட்டுக் கொடுத்த மருமகள்!!

இந்தியாவில் மருமகளை பலாத்காரம் செய்ய முயன்ற மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூரை சேர்ந்தவர் அபிஷேக், இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.இந்நிலையில் அபிஷேக்கின் அப்பா ஓம்பிரகாஷுக்கு அவர் மருமகள் மீது தவறான எண்ணம் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதை தனது உறவினர்களிடம் பெண் கூறியும் அதை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து தான் பிறந்த வீட்டிலும் இதுகுறித்து அந்த பெண் முறையிட அவர்களோ புகுந்த வீட்டில் இருந்து வெளியே வந்தால் சமூகம் தவறாக பேசும் அதனால் பொறுத்துக் கொள் என்று கூறியுள்ளனர்.மேலும், நேரம் வரும் போது எல்லாம் மாறிவிடும் என்று ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர்.

இனி யாரையும் நம்பி பயனில்லை என முடிவெடுத்த அபிஷேக்கின் மனைவி, தானே ஓம்பிரகாஷை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.இதையடுத்து தான் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது, தனது மாமனார் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்வதை தைரியமாக வீடியோ எடுத்து அதை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஓம்பிரகாஷை பொலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.