தி.மு.க தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகியின் குழந்தையுடன் கைகுலுக்கி அறிமுகப்படுத்திக்கொள்ளும் வீடியோ தற்போது வைரல்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியைக் கட்சி நிர்வாகிகளில் குடும்பத்தினர் அவ்வப்போது சந்தித்து அவருடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தி.மு.க நிர்வாகி ஒருவரின் குடும்பத்தினர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பொதுவாக, நிர்வாகி குடும்பத்தினருடன் புன்முறுவலுடன் புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் கருணாநிதி இம்முறை குழந்தைகளுடன் உரையாட முயற்சி செய்தார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், சிறுமியிடம் `நான் யார்’ என்று சைகையில் கேட்கிறார் கருணாநிதி. அந்தச் சிறுமி `கலைஞர் கருணாநிதி’ என்று பதில் சொல்கிறது. பின்னர் சிறுமியைப் பார்த்து கை நீட்டுகிறார். சிறுமியும் கைகுலுக்கி வாழ்த்து பெறுகிறார். ஏற்கெனவே தன் பேரக் குழந்தைகளோடு கருணாநிதி விளையாடும் காட்சிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.