கிளிநொச்சியில் பாரிய தீவிபத்து!

கிளிநொச்சி- கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டின் மேல் மாடி பாரிய சேதம் அடைந்துள்ளதுடன், பெருமதி வாய்ந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினை கட்டுக்குள்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்தவர்கள் நித்திரைக்கு சென்ற பின்னர், வீட்டின் மேல் மாடியில் தீபற்றியுள்ளமை குறித்து அயல்வர்கள் தகவல் வழங்கியதை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

இந்த தீவிபத்தினால் பல லட்சம் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.