இலங்கையில் முழுமையான பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களை நிறுத்துமாறு தன்னிடம் பல கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்கப்பட்டது. இவ்வாறு தான் எடுத்த முயற்சிக்கு சர்வதேச ரீதியில் பாராட்டு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இனக் கலவரம் ஏற்பட்ட போது இலங்கை நடந்து கொண்டமை போன்று, மியன்மாரிலும் நடந்திருந்தால் ஆரம்பத்திலேயே மோதலை தவிர்த்திருக்கலாம்.
இது தொடர்பில் சர்வதேச சமூகம் தற்போது புரிந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.