நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்தி, அவர்களை கைது செய்யும் நோக்கில் சீட்டா குறூப் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சீட்டா குறூப் சிறு சிறு குழுக்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாத்திரம் பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய 21 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 17 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, பாதாள உலக குழுவினரை கட்டுப்படுத்தி, அவர்களை கைது செய்யும் நோக்கில் சீட்டா குறூப் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.