தனது சொந்த சகோதரியை பல வருடங்களாக வன்புணர்விற்கு உட்படுத்திவந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தும்மலசூரிய இஹல வீரகொடியான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞர் 16 வயதுடைய அவரது சகோரியை இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளார்.பின்னர் , குறித்த சிறுமி சம்பவம் தொடர்பில் தமது பாடசாலையின் ஆசிரியை ஒருவருக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி , குறித்த ஆசிரியை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் , சந்தேகநபரான சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுமார் 6 வருட காலமாக குறித்த சிறுமியை இவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குளியாபிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.தும்மலசூரிய காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.